ஜில் என்ற குளிர் காற்று.. அடை மழை!மனதில் சுகமான உன் நினைவுகளை சுமந்தபடி நான் மட்டும் தனியே ஜன்னல் ஓரத்தில்!அடை மழை, ஒவ்வொரு மழை துளியும் உன் நினைவையூட்டுகிறது!
நான் உன்னை நினைத்து ஆசைபட்டது நானும் நீயும் மட்டும் இதில்..!
பரந்த புல் வெளியில் யாருமில்லா தனிமையில் நானும் என்மேல் விழும் மழை துளியாக நீயும்!
உன்னுடன் நானும் என்னுடன் நீயும் முழுதாய் கலந்து நனைந்து கொண்டோம்!
என்மேல் விழுந்த ஒவ்வொரு துளியும் உன் முத்தங்களாக....! தடுத்தும் முடியவில்லை பார்த்தாயா உனது லீலையை!
என் மேல் விழாத துளிகளுக்கு பொறாமை உன் மேல்!
அட, பொறுக்கவில்லையா உனக்கு ..? அதற்குள் என் சந்தோஷத்தை பறித்துக்கொண்டு போகின்றாயே..?!
அதே ஜன்னல் ஓரத்தில் உனக்காக அந்த நொடியில் என் மனதில் "துளியாய் விழுந்த" கவிதை இதுதான்....
"உன்னை ´எதிரில்´ பார்க்காத நாட்களைவிட ´எதிர்´ பார்த்த நாட்களே அதிகம்! மீண்டும் வருவாயா?
" அடை மழை வரும் அதில் நனைவோமே.... குளிர் காய்சலோடு சினேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...!" இதுகூட வெறும் கற்ப்பனை தானே! நிஜமானால்?! உன் நினைவுடன் நான்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக