ஞாயிறு, 9 நவம்பர், 2008

என் உயீரே....

நீ இல்லாஇதயம் இனிசுவாசிக்கது!
நீ இல்லாகனவு என்னில் தோன்றிடாது!
நீ இல்லாபகலும் என்னைஅழைத்திடாது!
நீ இல்லாவாழ்வெனக்குவனவாசமாகுதிப்போ!!!!

தவிக்கின்றேன்

மறந்துவிடு என்கிறாய் எதை மறப்பது எப்படி மறப்பதென்று தெரியாமல் தவிக்கின்றேன் நான்
எழுத்தே வராதஇந்த கைகளில்கவிதைகள் எழுதகற்றுக் கொடுத்ததேஉன் கண்கள் அதை மறப்பதா …….
சொல் அன்பேஎதை மறப்பதுஎப்படி மறப்பது
கல்லாய் இருந்த என்னை சிற்பமாய் செதுக்கினாய்உன் காதல் மொழிகளால்செதுக்கிய சிற்பத்தைநீயே உடைக்க நினைப்பதுஎன்ன நியாயம் அன்பே
உன்னை மறப்பதென்பதுஇயலாத ஒன்றுமரிக்கின்றேன் உன்னையும்உன் காதலையும்சுமந்து கொண்டுமீண்டும் பிறப்பெடுப்பேன்உன்னை அடைவதற்குஇன்னொரு ஜென்மம் இருக்குமென்றால் ………

நினைவுகளை சுமந்தபடி....!

ஜில் என்ற குளிர் காற்று.. அடை மழை!மனதில் சுகமான உன் நினைவுகளை சுமந்தபடி நான் மட்டும் தனியே ஜன்னல் ஓரத்தில்!அடை மழை, ஒவ்வொரு மழை துளியும் உன் நினைவையூட்டுகிறது!
நான் உன்னை நினைத்து ஆசைபட்டது நானும் நீயும் மட்டும் இதில்..!
பரந்த புல் வெளியில் யாருமில்லா தனிமையில் நானும் என்மேல் விழும் மழை துளியாக நீயும்!
உன்னுடன் நானும் என்னுடன் நீயும் முழுதாய் கலந்து நனைந்து கொண்டோம்!
என்மேல் விழுந்த ஒவ்வொரு துளியும் உன் முத்தங்களாக....! தடுத்தும் முடியவில்லை பார்த்தாயா உனது லீலையை!
என் மேல் விழாத துளிகளுக்கு பொறாமை உன் மேல்!
அட, பொறுக்கவில்லையா உனக்கு ..? அதற்குள் என் சந்தோஷத்தை பறித்துக்கொண்டு போகின்றாயே..?!
அதே ஜன்னல் ஓரத்தில் உனக்காக அந்த நொடியில் என் மனதில் "துளியாய் விழுந்த" கவிதை இதுதான்....
"உன்னை ´எதிரில்´ பார்க்காத நாட்களைவிட ´எதிர்´ பார்த்த நாட்களே அதிகம்! மீண்டும் வருவாயா?
" அடை மழை வரும் அதில் நனைவோமே.... குளிர் காய்சலோடு சினேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...!" இதுகூட வெறும் கற்ப்பனை தானே! நிஜமானால்?! உன் நினைவுடன் நான்!

நிலவே...

நீ இரவெல்லாம்விழித்திருந்துஉலகெல்லாம்எழில் சிந்துகின்றாய்
நான் இமை மூடமனமின்றிவிழித்திருக்கின்றேன்
நீ துக்கமே இல்லாதவள்எப்போது பார்த்தாலும் எழுத்துக்களில்அழகாகச்சிரிக்கும் தேவதை
என் எழுத்தோவியமேஉனையெண்ணிபுன்னகையும்செய்கின்றேன்!

பின்பற்றுபவர்கள்